தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டம், சேலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் திருமணி முத்தாற்றாங்கரையில் கிழக்கு முகமாக அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான சைவத்திருத்தலமாகும். இத்திருக்கோயிலின் மூலவர் சுயம்பு லிங்கத்திருமேனியாகவும் , தெற்கு முகமாக அம்பாள் சொர்ணாம்பிகை அருள்பாலிக்கிறார். சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட பெருமை வாய்ந்த தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள சுகவனசுப்ரமணியர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயிலில் தவளைகள் வாழாத அமண்டூக தீர்த்தம் என்னும் நந்தி கிணறு உள்ளது. இதிலுள்ள நீரே திருக்கோயிலுக்குள் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது . முக்கிய நுழைவு வாயிலில் மூன்று நிலை கிழக்கு இராஜகோபுரமும், பின் பகுதியில் மேற்கு இராஜகோபுரமும் உள்ளது. மேலும் திருக்கோயில் முன்புறம் அழகிய...
06:00 AM IST - 12:00 PM IST | |
03:30 PM IST - 09:00 PM IST | |
12:00 PM IST - 03:30 PM IST | |
காலை 6.00 முதல் பகல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டு வருகிறது. |