அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001, சேலம் .
Arulmigu Sugavanesuwarar Temple, Mettu Agraharam, Salem - 636001, Salem District [TM004858]
×
Temple History
இலக்கிய பின்புலம்
அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயிலின் தலபுராணம், அட்டாவதான சொக்கலிங்க புலவரால் எழுதப்பட்ட பாபநாச புராணம் என்ற நூலில் நாரத மாமுனிவரால் சனாதமுனிவருக்கு சொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும், பிரம்மதேவரின் படைப்பு பெருமைகளை குறித்து பலவாறாக புகழ்ந்து கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் சிவபக்தியில் சிறந்த சுகமுனிவரும் இருந்தார். வியாச முனிவருக்கும், திலோத்தமைக்கும் பிறந்து, கிளி போன்ற இயல்பு கொண்ட சுகமுனிவர் உடனே சரஸ்வதி தேவியிடம் சென்று, இப்புகழுரைகள் குறித்து தேவியிடம் உரைத்தார். இதை அறிந்த பிரம்மதேவர், கிளி உருவம் பெற்ற திலோத்தமையிடம் பிறந்து சுகன் என்று பெயர் பெற்ற நீ, ஒருவர் சொன்னதை அப்படியே சொல்லும் கிளியின் தன்மை உடையதால், கிளியாக கடவாய் என்று சபித்தார். அப்போது இச்சாபம்...அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயிலின் தலபுராணம், அட்டாவதான சொக்கலிங்க புலவரால் எழுதப்பட்ட பாபநாச புராணம் என்ற நூலில் நாரத மாமுனிவரால் சனாதமுனிவருக்கு சொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும், பிரம்மதேவரின் படைப்பு பெருமைகளை குறித்து பலவாறாக புகழ்ந்து கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் சிவபக்தியில் சிறந்த சுகமுனிவரும் இருந்தார். வியாச முனிவருக்கும், திலோத்தமைக்கும் பிறந்து, கிளி போன்ற இயல்பு கொண்ட சுகமுனிவர் உடனே சரஸ்வதி தேவியிடம் சென்று, இப்புகழுரைகள் குறித்து தேவியிடம் உரைத்தார். இதை அறிந்த பிரம்மதேவர், கிளி உருவம் பெற்ற திலோத்தமையிடம் பிறந்து சுகன் என்று பெயர் பெற்ற நீ, ஒருவர் சொன்னதை அப்படியே சொல்லும் கிளியின் தன்மை உடையதால், கிளியாக கடவாய் என்று சபித்தார். அப்போது இச்சாபம் நீங்கும் உபாயம் குறித்து சுகமுனிவர் பிரார்த்தனை செய்ய பாபநாசப்பகுதியில் உள்ள சுயம்பு மூர்த்தியை பூசித்தால் சாபம் நீங்கும் என்று உரைத்ததால். சாபம் பெற்ற சுகமுனிவர், அழகிய கிளியின் உருவம் பெற்று கிளிகளுக்கு அரசனாய், மற்ற கிளிகளுடன் சேர்ந்து தினைக்கதிர்களும், காய்கனிகளையும் சேகரித்து கொண்டு வந்து, சிவபெருமானை போற்றி வணங்கி வந்தார். இதை கவனித்து வந்த வச்சிரகாந்தன் என்ற வேடன், கிளிகளை விரட்டிப்பிடிக்க முயல்கையில் அனைத்து கிளிகளும் ஊர் புற்றில் தஞ்சம் புகுந்திட, வேடன் மண்வெட்டியால் புற்றை வெட்டியதும் அனைத்து கிளிகளும் மாண்டன. கிளிகளின் அரசனான சுகமுனிவர் சிவபெருமானின் முடிமேல் சிறகை விரித்து காத்து நிற்க, வேடன் மண்வெட்டியால் கிளியை தாக்க, கிளி இறந்துவிட்டது. சிவபெருமான் திருமுடியில் வெட்டுப்பட்டு குருதி பெருகியது. இதை கண்டு மனம் கலங்கிய வேடன், தனது உடைவாளால் தன்னுயிரை மாய்த்து கொண்டு சிவதிருவடி அடைந்தான். இறந்துபோன கிளிகளும் திருக்கயிலாயம் அடைந்தன.
கிளிகளின் அரசன் சாபம் நீங்கி திவ்ய உடலை பெற்று சுகமுனிவராகி சிவபெருமானை போற்றினார். கிளி உருவம் நீங்க பெற்ற சுகமுனிவர் புகழ்ச்சியை கேட்ட பெருமான், ஏதேனும் வரம் கேட்கும்படி பணிக்க அப்போது சுகமுனியவர் பிறை சூடிய பெருமானே வறுமை வரினும் செல்வம் வரினும் இகபர இன்பங்கள் கிடைப்பினும் உன் திருவடிகளே கதியாக அடையும்படி அருள் செய்யும் என்று வேண்டி வரம் பெற்றார்.
இவ்வாறு பாபநாசப்பகுதியில் சுக முனிவர் கிளி உருவங்கொண்டு பூசித்ததால், கிளிவனம், சுகவனம் என்றும் பெருமானுக்கு கிளிவனநாதர், சுகவனேசர் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. திருக்கோயிலில் அழகிய கிளி உருவம் கொண்ட சுகமுனிவரின் சிலை இடது புற துவாரபாலகரின் சிலைக்கு அருகில் உள்ளது.